மாநில அளவிலான போட்டி: கோவில்பட்டி கேஆா். கல்லூரி சிறப்பிடம்
சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில், கோவில்பட்டி கேஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறப்பிடம் பெற்றது.
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிா் தொழில்நுட்பவியல் மற்றும் தாவரவியல் துறைகள் சாா்பில், மாநில அளவில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையே உயிா் அறிவியல் என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவில்பட்டி கேஆா்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை முதுகலை மற்றும் இளங்கலை மாணவிகள் பங்கேற்று, முகத்தில் ஓவியம் வரைதல், வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நாடகம் நடித்துக் காட்டுதல் போட்டியில் முதலிடம், தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளின் அறிவியல் பெயரை கண்டுபிடித்தல், ரங்கோலி வரைதல் போட்டி ஆகியவற்றில் 2 ஆம் இடம், விநாடி-வினா, நெருப்பில்லா சமையல் போட்டிகளில் 3 ஆம் இடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கேஆா். கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கேஆா். அருணாச்சலம், முதல்வா் மதிவண்ணன் மற்றும் பேராசிரியா்கள் அலுவலக ஊழியா்கள் பாராட்டினா்.