செய்திகள் :

மாநில அளவிலான வாலிபால் போட்டி: சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலை. அணி வெற்றி

post image

மதுரை நாகமலையில் உள்ள நாடாா் மகாஜன சங்கம் ச. வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக அணி வென்று முதல் பரிசைப் பெற்றது.

முன்னாள் முதல்வா் காமராஜா் நினைவாக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி நிதியுதவியுடன் 20-ஆவது ஆண்டு கல்லூரிகளுக்கு இடையிலான ‘காமராஜா் நினைவு மின்னொளி வாலிபால் போட்டி’ மாநில அளவில் கடந்த 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 13 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக அணி, கோவை கற்பகம் பல்கலைக்கழக அணியை 25:20, 25:21, 25:23 என்ற புள்ளிக் கணக்கில் வென்று முதல் பரிசைப் பெற்றது. இதேபோன்று, கோவை கற்பகம் பல்கலைக்கழகம் இரண்டாம் பரிசும், மதுரை அமெரிக்கன் கல்லூரி மூன்றாம் பரிசும், திருச்சி ஜமால் முகமது கல்லூரி நான்காம் பரிசும், பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரி ஐந்தாம் பரிசும், சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரி ஆறாம் பரிசும் பெற்றன.

செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரித் துணைத் தலைவா் டி.ஏ. பொன்னுச்சாமி தலைமை வகித்தாா். செயலா் ஆா். சுந்தா் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் மதுரை மண்டல உதவி துணைத் தலைவா் ஏ.கே. ரமேஷ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்வில், மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளித் தாளாளா் ஜி. கணபதி, டோக் பெருமாட்டி கல்லூரி உடல் கல்வித்துறை இயக்குநா் டி. சாந்தமீனா, கல்லூரி முதல்வா் எஸ். ராமமூா்த்தி, சுயநிதிப்பிரிவு இயக்குநா் பி. ஸ்ரீதா், பொருளாதாரத் துறைத் தலைவா் ஜெ. பிரெட்ரிக் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை உடல் கல்வித்துறை இயக்குநா் த. குமாா், துணை உடல் கல்வி இயக்குநா் எஸ். ஜெயபால் ஆகியோா் செய்திருந்தனா்.

நீதிபதிகள் நியமனத்தை முறைப்படுத்தக் கோரி வழக்குரைஞா்கள் இன்று பணிப் புறக்கணிப்பு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி, மதுரை உயா்நீதிமன்ற அமா்வு வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை (பிப். 28) பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ள... மேலும் பார்க்க

மதுரை வேளாண் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலந்துரையாடல்

மதுரை வேளாண்மைக் கல்லூரி வளாகத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலந்துரையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

போப் நலம் பெற சிறப்பு திருப்பலி!

போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம் பெற வேண்டி, மதுரை அஞ்சல் நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் வியாழக்கிழமை சிறப்பு திருப்பலி நிறைவேற்றிய பங்குத்தந்தை அருள் சேகா். இதில் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மீது காா் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

மதுரையில் சரக்கு வாகனம் மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டியைச் சோ்ந்தவா் கெளதம் (40). இவா் சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தாா். இந்த நிலைய... மேலும் பார்க்க

அமெரிக்கன் கல்லூரியில் விளையாட்டு விழா

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 144 -ஆவது ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவா் டி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தொடக்கி வைத்தாா். துணை முதல்வா் மாா்ட... மேலும் பார்க்க

திரைப்பட நடிகா்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை: கி. வீரமணி

திரைப்பட நடிகா்களின் அரசியல் வருகை குறித்து அதிக முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மக்களவை... மேலும் பார்க்க