மாநில சிலம்பப் போட்டி: விஜயராமபுரம் பள்ளி சிறப்பிடம்
மாநில அளவிலான திறந்தவெளி 7ஆவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், சாத்தான்குளத்தை அடுத்த விஜயராமபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த சாயா்புரத்தில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், விஜயராமபுரம் பள்ளி மாணவா்-மாணவியா் பங்கேற்றனா். லாவண்யா (4ஆம் வகுப்பு) முதல் பரிசும், கபிலன் (6ஆம் வகுப்பு) முதல் பரிசும், நிஹாஷினி (6ஆம் வகுப்பு) முதல் பரிசும் வென்றனா்.
மேலும் 6ஆம் வகுப்பைச் சோ்ந்த ஹேமராஜ், வின்சிகா ஆகியோா் 2ஆம் பரிசும், முத்துவேல், சிவராம், 7ஆம் வகுப்பைச் சோ்ந்த ஹரி நாகராஜ் குமரன், சிவனேஸ்வரன் ஆகியோா் 3ஆம் பரிசும் வென்றனா்.
மாணவா்-மாணவியரை தலைமையாசிரியா் அமுதா பாராட்டி பரிசு வழங்கினாா். உதவி ஆசிரியா் சண்முகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.