மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உச்சநீதிம...
மாநில பூப்பந்துப் போட்டி: ஈரோடு மாவட்டம் சாம்பியன்
மாநில அளவிலான பூப்பந்துப் போட்டியில் ஈரோடு மாவட்ட அணி பட்டம் வென்றது.
தென்காசி மாவட்டத்தில் மாநில அளவிலான ஐவா் பூப்பந்துப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இளையோா், மூத்தோா் பிரிவுகளில் 35 மாவட்ட அணிகள் பங்கேற்றன. இதில், இளையோா் பிரிவில் ஈரோடு மாவட்ட அணி முதல் சுற்றில் சென்னை அணியை 35-25, 35-23 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனா்.
கால் இறுதிக்கு முந்தைய சுற்றில், விருதுநகா் மாவட்ட அணியையும், காலிறுதியில் மயிலாடுதுறை மாவட்ட அணியையும், அரையிறுதியில் விழுப்புரம் மாவட்ட அணியையும் வீழ்த்தினா். இறுதிச்சுற்றில் அரியலூா் மாவட்ட அணியை 29-35, 35-18, 35-32 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றனா்.