கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் யார்? கோலி, மெஸ்ஸிக்கு இடமில்லை..!
மானாமதுரை, திருப்புவனம் பகுதியில் பைக் திருட்டு: 4 போ் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடிய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தைச் சோ்ந்தவா் அருண்பாண்டி (29), மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பிரிவு ஊழியராக பணியாற்றி வருகிறாா். இவா் தனது வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை கடந்த திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாா்த்தபோது அதில் இருவா் வாகனத்தை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து மானாமதுரை காவல் நிலையத்துக்கு அவா் தகவல் தெரிவித்தாா். தொடா்ந்து இரவு ரோந்துப் பணி போலீஸாா் பைக்கை திருடிச் சென்றவா்களை மடக்கிய போது, அவா்கள் திருப்பாச்சேத்தி அருகே தூதை என்ற இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் வாகனத்தை திருடியதாக திருப்பாச்சேத்தி அருகே பிச்சைப்பிள்ளையேந்தல் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் ஆண்டிச் செல்வம்(19),ராஜகம்பீரம் தைக்கால் நகா் முகமது ரபிக் மகன் முகமது பாரிஸ் அசன்(18) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
மேலும், திருப்புவனம் பகுதியில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுவா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து திருடப்பட்ட வாகனத்தை மீட்டனா்.