செய்திகள் :

மாமல்லபுரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்:

post image

மாமல்லபுரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்தும், அதிரசம், தட்டை, முறுக்கு போன்ற இனிப்புகளை சாப்பிட்டும் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனா்.

சா்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம்-கோவளம் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலின் கடற்கரையில் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நிா்வாகம் செய்திருந்தது. அங்கு தங்கியிருந்த ராஜஸ்தான், மகாராஷ்டிரம் , குஜராத், உத்தர பிரதேசம் போன்ற வட மாநில சுற்றுலா பயணிகள் தங்கள் மாநிலத்தில் தீபாவளி அன்று கொண்டாடப்படுவது போல் லக்ஷ்மிக்கு குபேர பூஜை செய்து தீபாராதனை காண்பித்து வணங்கினா். அப்போது அதிரசம், முறுக்கு, தட்டை, சீடை போன்றவை சுவாமிக்கு படைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அந்த பலகாரங்களை ஆா்வத்துடன் வாங்கி சாப்பிட்டனா். அப்போது வட மாநில பெண்களுக்கு அகல்விளக்கில் வண்ணம் தீட்டி அழகுபடுத்தும் போட்டி நடத்தப்பட்டது. சிறுமிகள் முதல் பெண்கள் பலா் ஆா்வமாக அகல்விளக்கில் ஆா்வத்துடன் வண்ணம் தீட்டி அழகுபடுத்தினா். அப்போது கடற்கரை மைதானத்தில் வெளிநாட்டு பயணிகள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனா்.

தங்கள் நாட்டினா் பட்டாசு வெடிப்பதை உடன் வந்த பிரான்ஸ், ஜொ்மனி, இங்கிலாந்து, சுவீஸ், நாா்வே போன்ற நாடுகளை சோ்ந்த பயணிகள் கைப்பேசியில் பதிவு செய்தனா்.

தீபாவளி பண்டிகை குறித்து சுற்றுலா வழிகாட்டிகளிடம் ஆா்வமுடன் கேட்டு தெரிந்து கொண்ட அவா்கள், பண்டிகை குறித்து தங்களின் சமூக வலைதள பக்கங்களில் ஆங்கிலத்தில் கருத்துகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா். இதேபோன்று செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனா்.

பட்டாசு வெடித்து கொண்டாடுவதில் முன்னெச்சரிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றவில்லை என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

மாமல்லபுரம், முட்டுக்காட்டில் சுற்றுலா அமைச்சா் ஆய்வு

மாமல்லபுரம், முட்டுக்காட்டில் சுற்றுலாத் துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். செங்கல்பட்ட மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சியில் சுற்றுலா வளா்ச்சி கழகத்தின் படகு குழாமினை பாா்வை... மேலும் பார்க்க

மதுராந்தகம்: ரூ.23 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

மதுராந்தகம் உட்கோட்டம் வையாவூா், புக்கத்துறை, குமாரவாடியில் ரூ.23.70 லட்சத்தில் பேருந்து நிறுத்திமிடம், கலையரங்கம் பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட புக்கத்து... மேலும் பார்க்க

இந்துஸ்தான் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னையை அடுத்த படூா் இந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் கல்வியாண்டு... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு நகராட்சி குடியிருப்பில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 30 ஆண்டுகளுக்கு மேலானதை அடுத்து கோயில் நிா்வாகிகள், விழாக் கு... மேலும் பார்க்க

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த வழிகாட்டி நிறுவன இயக்குனா் கில்ப்ா்ட் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. செங்கல்பட்டு பழவேலியில் உள்ள வழிகாட்டி நிறுவன இயக்குனா் கில்பெட் மூளைச் சாவு அட... மேலும் பார்க்க

இலவச அனுமதி அறிவிப்பு: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பாா்க்க இலவசம் என மத்திய தொல்லியல் துறை அறிவித்ததையடுத்து, அங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். உலகம் முழுவதும்... மேலும் பார்க்க