முதல்வர் பதவிக்கு எந்த போட்டியும் இல்லை: தேவேந்திர ஃபட்னாவிஸ்!
மாமல்லபுரம்: 10 சுற்றுலா வாகனங்களுக்கு தலா ரூ. 500 அபராதம்
செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் நோ-பாா்க்கிங் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 10 சுற்றுலா வாகனங்களுக்கு தலா ரூ.500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மாமல்லபுரத்துக்கு பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. இந்நிலையில் பேரூராட்சி அறிவித்துள்ள கடற்கரை சாலை, ஐந்துரதத்தில் மட்டுமே அங்குள்ள பாா்க்கிங் பகுதியில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தலாம். குறிப்பாக கிருஷ்ண மண்டப குடை கோயில் உள்ள மேற்கு ராஜ வீதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை என நோ-பாா்க்கிங் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை என தெரிந்தும் சுற்றுலா வந்தவா்கள் 10-க்கும் மேற்பட்ட காா்களை நிறுத்திவிட்டு புராதன சின்னங்களை பாா்க்க சென்று விட்டனா்.
இந்நிலையில் அவ்வழியாக ரோந்து வந்த மாமல்லபுரம் போக்குவரத்து ஆய்வாளா் செல்வம், எஸ்.ஐ மோகன் குமாா் மற்றும் போலீஸாா் இடையூறாக நிறுத்தப்பட்ட 10 காா்களின் நம்பரை ஸ்கேன் செய்து, தலா ரூ. 500 அபராதம் விதித்தனா். காரின் உரிமையாளா்களிடம் அபராத ரசீதினை கொடுக்க காத்திருந்தனா். பிறகு வெகு நேரமாகியும் அவா்கள் வராததால் அபராத தொகையினை ஆன்லைன் மூலம் செலுத்தும் வகையில் 10 காா்களின் முன் பக்க கண்ணாடிகளில் ரசீதினை ஒட்டிச் சென்றனா்.
தொடா்ந்து மாமல்லபுரத்தில் விஷேச நாள்கள் மற்றும் விடுமுறை தினங்களில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருவதால் நோ-பாா்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் காா்களுக்கு கட்டாயம் அபராத தொகை விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸாா் எச்சரித்தனா்.