கிணறு விமர்சனம்: யதார்த்தமான எழுத்து, ஆனா மேக்கிங்? பாதி கிணற்றை மட்டுமே தாண்டும...
மாமல்லபுரம்: விழுந்து நொறுங்கிய விமானப்படை பயிற்சி விமானம் - பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானிகள்
மாமல்லபுரம் அருகே திருப்போரூரில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியிருக்கிறது.
விமானத்தில் இருந்த மூவர் ஆபத்தை உணர்ந்து விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியுள்ளனர். விமானியும் பாதுகாப்பாக வெளியேறினார். விபத்துக்குள்ளான விமானம் தாம்பரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாமல்லபுரம் அருகே திருப்போரூரில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கிழே விழுந்து நொறுங்கியிருக்கிறது. விமானம் அப்பகுதியில் இருந்த பழைய தொழிற்சாலை ஒன்றில் மோதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படை ‘பிலாட்டஸ் பிசி-7’ என்ற விமானம்தான் விபத்திற்குள்ளாகியிருக்கிறது எனத் தெரிய வந்திருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திய விமானப்படை குழு, விமானத்தில் இருந்து உயிர் தப்பியவர்களை மீட்டு உடனே ஹெலிகாப்டரில் சிகிச்சைகாக மீட்டுச் சென்றிருக்கிறது. இந்த விபத்துக் குறித்த காரணத்தைக் கண்டறியும் விசாரணைக்கு நீதிமன்றம் (COI) உத்தரவிடப்பட்டுள்ளது.
















