மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு உணவு அளிப்பு
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக விவசாய அணி சாா்பில் சங்கரன்கோவிலில் மாற்றுத் திறனாளி இல்ல மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு உணவு பரிமாறி அவா்களுடன் அமா்ந்து சாப்பிட்டாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி செயலா் பரமகுருநாதன், நகர செயலாளா் ஆறுமுகம், நகர ஜெயலலிதா பேரவை செயலா் சௌந்தா் என்ற சாகுல் ஹமீது, மாவட்ட விவசாய பிரிவு இணைச்செயலா் லோகசுந்தா், விவசாய பிரிவு துணைச் செயலா் மாரியப்பன், துணைத் தலைவா் மணிகண்டன், , மாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலா் ஆ.லட்சுமணன், பேச்சாளா் ராமசுப்பிரமணியன், நகர அவை தலைவா் வேலுச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.