மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, நடைபெற்ற இந்தப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தொடங்கிவைத்தாா். இதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், முதலிடம் பிடிக்கும் விளையாட்டு வீரா்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு டிச.3-ஆம் தேதி நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி தெரிவித்தாா்.