செய்திகள் :

மாவீரர் மாதத்தில் காங்கிரஸுடன் கூட்டணி பேசும் விஜய்? - நா.த.க-வின் அரசியல் கணக்கு!

post image

'விஜய்யின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு' என சொல்லப்பட்டுவரும் சூழலில், த.வெ.க காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வரும் தகவல்கள் நாம் தமிழர் கட்சியினரை நிம்மதியடையச் செய்திருக்கிறது என்கிறார்கள் சிலர்.

"2009 மே 18-ம் தேதி, ஈழப் போர் மௌனமாக்கப்பட்ட நிலையில் 2010 மே 18-ல் நாம் தமிழர் கட்சியை தொடங்கினார் சீமான். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தியும் காங்கிரஸ் எதிர்ப்பை தீவிரப்படுத்தியுமே அவரது அரசியல் நகர்ந்தது.

'காங்கிரஸ் தமிழின விரோதி' என கோட்பாட்டில் இன்றளவும் உறுதி காட்டுகிறார் சீமான். நா.த.க-வின் வாக்குவங்கி என்பதே ஈழ உணர்வாளர்கள், தமிழ்தேசிய ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பாளர்களை மையப்படுத்தியது. விஜய் கட்சித் தொடங்கிய சூழலில், வாக்குகள் விஜய்க்கு மடைமாறி சீமான் பாதிப்பை எதிர்கொள்ளப்போகிறார் என்ற பேச்சும் நிலவுகிறது. தேர்தல் நெருங்கும் இச்சூழலில் விஜய் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் கசிகின்றன.

சீமான்
சீமான்

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், "தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதும் நமது கடமை" என நாகை பிரச்சாரத்தில் பேசியிருந்தார் விஜய். ஆனால், 'ஈழத் தமிழர்களுக்காக த.வெ.க செய்த கடமை என்ன?' என்ற கேள்வி எழுகிறது. ஈழப்போர் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கப்பட்டது. ஆனால் கொள்கை எதிரி, அரசியல் எதிரி என எந்த வரிசையிலும் காங்கிரஸை வைக்கவில்லை விஜய்.

ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த கண்டனத்தையும் இதுவரை விஜய் பதிவு செய்யவில்லை. அதேசமயம் ஈழத் தமிழர்கள் குறித்தும், விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்தும் எந்த இடத்திலும் பேசவில்லை. ஈழ அரசியலையும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து அவர் பேசவில்லையே என்ற விமர்சனம் இருக்கும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விஜய் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வரும் செய்திகள் ஈழ, தமிழ்தேசிய உணர்வாளர்கள் மத்தியிலும் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்காளர்கள் மத்தியிலும் விஜய்க்கு பின்னடைவை தரலாம்.

ஈழப்போராட்டத்தில் விஜய்

குறிப்பாக, ஈழ அரசியலையும் விடுதலைப் புலிகளையும் ஆதரிக்காமல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முயல்வதால் நா.த.க-வின் வாக்குகள் விஜய்க்குப் போகாது என கணக்கு போடுகிறார்கள் அக்கட்சியினர். வரும் நவம்பர் 26-ம் தேதி பிரபாகரன் பிறந்தநாளும், நவம்பர் 27-ம் தேதி மாவீரர் நாளும் அனுசரிக்கப்படுகிறது. காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு மாவீரர் நாளன்று 'மாவீரரைப் போற்றுதல்' என ட்வீட் செய்தால் விஜய், நா.க.க வினரால் விமர்சனத்துக்குள்ளாவார்" என்றார்கள்.

இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய நா.த.க-வின் கார்த்திகைச்செல்வன், "அ.தி.மு.க-வுடன் த.வெ.க கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்கிற செய்தி வெளியான பொழுது அதை மறுத்து அறிக்கை விட்ட த.வெ.க, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை என்று கடந்த சில நாள்களாக தொடர்ந்து செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் போதும் அமைதி காக்கிறது.

கார்த்திகைச்செல்வன்

`தாய்ப் போல் இருந்து காத்த தலைவன்" என்று பேசிவிட்டு, அந்தத் தலைவனை, அவர் கட்டியமைத்த நாட்டை, நாசமாக்கிய காங்கிரஸுடன் மாவீரர் மாதத்திலேயே பேச்சுவார்த்தை நடத்துகிறார் விஜய். முதலில் விஜய்யின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு என்பது அப்பட்டமான கருத்துவாக்கமே. அதுவும் காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியும், தலைவர் பிரபாகரனை பெயரை உச்சரிக்க தயங்கும் விஜய்க்கு நா.த.க-வின் ஒரு ஓட்டுக்கூட போகாது" என்கிறார் நம்பிக்கையுடன்.!

கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி | Photo Album

இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சிஇந்திய பாதுகாப்புத் துறை கண்கா... மேலும் பார்க்க

தேனி: ``பள்ளிப் பாதையில் குவியும் குப்பைகள்; நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்'' - பெற்றோர்கள் வேதனை

தேனி அல்லி நகரம் அருகே உள்ள பாரஸ்ட் ரோட்டில் அமைந்துள்ளது நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் பல மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் பாதையில் குப்பைகளை கொட்டு... மேலும் பார்க்க

'மேயர் பிரியா டு பத்மபிரியா' - தலைநகர் சீட் ரேஸில் திமுக ஜூனியர்கள்? ; விடாப்பிடி சீனியர்கள்!

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தலைநகர் தொகுதிகளை குறிவைத்து தி.மு.க ஜூனியர் நிர்வாகிகள் காய்நகர்த்தி வருவதை, சீனியர்கள் பலரும் ரசிக்கவில்லை என முணுமுணுக்கிறார்கள் விவரமறிந்த அறிவாலயப் புள்ளிகள். ... மேலும் பார்க்க

``41 பேர் உயிரிழந்தாலும், அன்பு குறையவே இல்லை; மக்கள் விஜய் பக்கம்தான்'' - தவெக அருண்ராஜ் பேட்டி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது.தவெக வை அதிமு... மேலும் பார்க்க

"அதிரடி அபராதங்கள்; ஆம்னி பேருந்து விவகாரத்தில் சுமூக தீர்வு வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி

கடந்த நவம்பர் 7ம் தேதி கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் அதிகாலை 3 மணி அளவில் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்ட... மேலும் பார்க்க

`திருமணத்துக்கு பெண் பார்த்து கொடுங்க, மறக்கவே மாட்டேன்’ - சரத் பவாருக்கு கிராம இளைஞரின் கோரிக்கை

மகாராஷ்டிரா கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். அதுவும் விவசாயம் செய்யும் இளைஞர்கள்தான் இது போன்ற சிக்கல்களை அதிக அளவில் சந்திக்கின்றனர். இதனால் இளைஞர்க... மேலும் பார்க்க