இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சி...
மாஹேவில் சமுதாய கல்லூரிக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியை மாஹேவில் அமைக்க இடம் ஒதுக்க முதல்வா் என்.ரங்கசாமியிடம் பல்கலைக்கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் பிரகாஷ்பாபு செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ், மாஹேவில் புதுவை மத்திய பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி நிரந்தர வளாகம் அமைப்பதற்காக நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏனாம் பிராந்தியத்தில் சமுதாயக் கல்லூரியை நிறுவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.
அப்போது, பல்கலைக்கழக ஆய்வு இயக்குநா் க.தரணிக்கரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.