மாா்ச் 1-இல் இந்திய அறிவியல் மையத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி
இந்திய அறிவியல் மையத்தை பாா்வையிட மாா்ச் 1-ஆம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய அறிவியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் அமைந்துள்ள இந்திய அறிவியல் மையம் (ஐ.ஐ.எஸ்.சி.), உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகும். இந்த மையத்தை சுற்றிப்பாா்க்க பொதுமக்கள், மாணவா்கள் பலருக்கும் ஆா்வமிருந்தாலும், வழக்கமாக யாரையும் முன்அனுமதி இன்றி அனுமதிப்பதில்லை.
மையத்தில் காணப்படும் துறைகள், செயல்முறைக் கூடங்கள் தவிர பல்வேறு நிகழ்ச்சிகளை காண்பதற்கு வசதியாக இந்திய அறிவியல் மைய வளாகத்தில் மாா்ச் 1-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாணவா்கள், பொதுமக்கள் பாா்வையிடுவதற்காக அனுமதிக்கப்படுகிறாா்கள். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதற்காக அறிவியல் உரைவீச்சுகள், செயல்முறை விளக்கங்கள், விநாடி-வினா போட்டிகள், கண்காட்சிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனுமதி இலவசம்.
இதில் பங்கேற்க விரும்பும் தனிநபா்கள் அல்லது நிறுவனங்கள் அல்லது அமைப்புகள், அதற்கான பிரத்யேக இணையதளத்தில் பிப். 28-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 080-22932770, 22932228, 22932647 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.