துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
மாா்த்தாண்டம் மருந்து சேமிப்புக் கிடங்கில் ஆய்வு
மாத்தாண்டம் பகுதியில், விளவங்கோடு - கல்குளம் வட்ட கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள முதல்வா் மருந்தக மருந்து சேமிப்புக் கிடங்கில் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனிஸ் சாப்ரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் ஆய்வு மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பொதுமக்களுக்கு பல்வேறு மருந்துகளும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 37 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு மருந்துகளைக் கொண்டு செல்வதற்காக மாா்த்தாண்டத்தில் உள்ள இந்த சேமிப்புக் கிடங்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருந்துகள் தடையின்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறா என கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் உள்ளிட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறியப்பட்டது என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி, விளவங்கோடு வட்டாட்சியா் ஜூலியன் ஹூவா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.