பிஎஸ்என்எல் 6ஜி திட்டம் விரைவில்! தகவல்தொடர்பு அமைச்சகம் தகவல்
மிகப்பெரிய பொறுப்பு தரப்பட்டுள்ளது: சஞ்சய் மல்ஹோத்ரா
ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வேன் என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
மத்திய வருவாய்த் துறைச் செயலராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. இதையடுத்து, மத்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து ஆர்பிஐ ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியில்,
மிகப்பெரிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வேன். அனைத்து முடிவுகளும் பொது நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும்.
மத்திய வங்கி கொள்கை விஷயங்களில் தற்போதுள்ள நடைமுறைகள் தொடரும். ஆனால் தற்போதைய உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழலையடுத்து எச்சரிக்கையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நிதிச் சேர்க்கையை மேலும் ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்தும் என்று அவர் கூறினார்.