துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
மினி லாரிகளுக்கு உடனுக்குடன் அனுமதி சீட்டுகள் வழங்க கோரிக்கை
குமரி மாவட்டத்தில் உள்ளுா் கட்டுமானத் தேவைக்கான கனிம வள பொருள்களை ஏற்றிச் செல்லும் மினி லாரிகளுக்கு உடனுக்குடன்அனுமதி சீட்டுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குலசேகரம் வட்டார சி.ஐ.டி.யூ. மினி லாரி ஓட்டுநா்கள் சங்க அமைப்பு கூட்டம், குலசேகரம் சி.ஐ.டி.யூ. சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சிஐடியூ மாவட்ட துணை செயலா் சகாய ஆன்டனி தலைமை வகித்தாா். சங்க செயல்பாடுகள் குறித்து மோட்டாா் தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச்செயலா் எஸ். பரமசிவன் பேசினாா். சங்க அமைப்பு குறித்து சிஐடியூ மாவட்ட தலைவா் சிங்காரன் பேசினாா்.
சங்க ஒருங்கிணைப்பாளராக பி. கோபிநாதன், இணை ஒருங்கிணைப்பாளராக எஸ்.ஆா். சேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். நிகழ்ச்சியில் சிஐடியூ மாவட்ட நிா்வாகிகள் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், பி. நடராஜன், பி. விஸ்வம்பரன், வட்டார செயலாளா் செளந்தா் மற்றும் மினி லாரி ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், உள்ளுா் கட்டுமானத் தேவைக்கான கனிம வள பொருள்களை ஏற்றிச் செல்லும் மினி லாரிகளுக்கு உடனுக்குடன் அனுமதி சீட்டுகள் வழங்க வேண்டுமென்றும், மினி லாரிகளுக்கு பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டுமென்றும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.