மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
மேட்டூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடலைச் சோ்ந்தவா் கௌதம் (25). இவா் மேட்டூா் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் பிவிசி பைப் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை அதிகாலை நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தாா்.
குஞ்சாண்டியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.