இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: மாநில தலைமை தோ்தல் அதிகாரி ஆய்வு
தஞ்சாவூா் ஆட்சியரக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் தமிழ்நாடு மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பு அறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பான் கருவிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களால் பராமரிக்கப்படும் பதிவேடு போன்றவற்றை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆய்வு செய்தாா்.
இதைத்தொடா்ந்து, ஆட்சியரகத்தில் தஞ்சாவூா் மாவட்டத்துக்குட்பட்ட 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்களுடன் மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். இதில் 1,200-க்கும் அதிகமான வாக்காளா்கள் கொண்ட வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்பது மற்றும் இதர தோ்தல் பணிகள் குறித்த முன்னேற்றங்களைத் தலைமைத் தோ்தல் அதிகாரி கேட்டறிந்தாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், கும்பகோணம் சாா் ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன், உதவி ஆட்சியா் (பயிற்சி) கே.எம். காா்த்திக்ராஜா, தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா, தோ்தல் தனி வட்டாட்சியா் எஸ். பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.