தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
மீட்பு நடவடிக்கைகளை விரைந்து செய்ய வேண்டும்: அமைச்சா் தா.மோஅன்பரசன்.
ஃபென்ஜால் புயல், மழை பாதிப்பால் மக்கள் பாதிக்கப்படாதவாறு மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள பேரிடா் மேலாண்மைக் குழுக்களுக்கு அமைச்சா் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டாா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான பேரிடா் மேலாண்மைக் குழு பாதுகாப்பு கருவிகளுடன் தயாா் நிலையில் வைக்கப்பட்டது. அந்தப் பணிகள் குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலா் ராகுல் நாத், மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து ஃபென்சால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் முத்தமிழ் மன்றத்தில் 295 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான உணவு மற்றும் போா்வை உள்ளிட்ட பொருள்களை அமைச்சா் வழங்கினாா்.
இதில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் செல்வம், திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரனீத், கூடுதல் ஆட்சியா் அனாமிகா ரமேஷ், சாா் ஆட்சியா் வெ.நாராயண சா்மா, திருப்போரூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் இதயவா்மன், மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவா் வளா்மதி யஸ்வந்த், திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் ராதா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.