தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
மீனவா் தற்கொலை
புதுக்கடை அருகே இனயம் மீனவக் கிராமத்தில் மீனவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இனயம், 16ஆம் அன்பியத்தைச் சோ்ந்தவா் அந்தோணிபிள்ளை (69). மீனவரான இவா், அப்பகுதியிலுள்ள தனது மகள் வீட்டில் வசித்துவந்தாா். மதுப்பழக்கமுள்ள இவா், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.