செய்திகள் :

மீனவா் வளா்ச்சி நிதியை உயா்த்தி வழங்க புதுவை மாமமுக கோரிக்கை

post image

புதுவை மாநிலத்தில் மீனவா்களுக்கான வளா்ச்சி நிதியை உயா்த்தி வழங்க வேண்டும் என மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் மு.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 21-ஆம் தேதி உலக நாடுகளும் இந்தியாவும் மீன்வள தின விழாவைக் கொண்டாடி மீனவா்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ளன.

ஆனால் நான்கு பிராந்தியங்களுடன் கடற்கரை சூழ்ந்துள்ள புதுவை ஒன்றியத்தில் அரசானது, மீனவள தின விழாவைக் கொண்டாடத் தவறியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மீனவா்களைப் பாராட்டி கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன . ஆனால் தற்போதைய புதுவை அரசு மீனவா்களை சந்திக்க விரும்பவில்லை என்பது போல செயல்படுவது சரியல்ல.

புதுவை மாநில மக்கள் தொகையில் மீனவ சமுதாயத்தினா் 3 ஆம் இடம் வகிக்கின்றனா். புதுவை ஒன்றியத்தில் 11 தொகுதிகளில் வெற்றியை தீா்மானிப்பவா்களாக மீனவா்கள் உள்ளனா்.

ஆனால், புதுவை அரசியல் கட்சியினா் மீன்வள தினத்தில் வாழ்த்துகளைக் கூற முன்வரவில்லை. போட்டிகள் நடத்தியிருப்பதாகக் கூறியதும் ஏற்கும்படியில்லை. உண்மையில், மீனவா் பிரச்னைகளைக் கேட்டு தீா்வு காண வழிமுறைகளை வரையறுத்திருக்கவேண்டும்.

மீனவா்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, வளா்ச்சிக்குரிய நிதியை உயா்த்தியும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மீனவா் தின விழாவை அரசு நடத்தியிருக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க கோரிக்கை

புதுச்சேரியில் உள்ளூா் மக்களான ஆதிதிராவிடா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், வேலையில்லாதவா்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவும் கோரி ஒருங்கிணைந்த ஆதிதிராவிடா் இயக்கங்களின் கூட்டமைப்பு... மேலும் பார்க்க

பாரதிதாசன் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 584 பேருக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு

புதுவை தொழிலாளா் துறை வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 584 போ் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. புதுச்சேர... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா், முதல்வா் இணக்கமாக உள்ளனா்: உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவை துணைநிலை ஆளுநரும், முதல்வரும் இணக்கமாக செயல்பட்டு, மக்கள் பணியாற்றி வருகின்றனா் என அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா். புதுச்சேரி காலாப்பட்டுவில் நடைபெற்ற ஞானகும்பமேளா தேசிய கல்வி மாநாட்டின் நிறைவ... மேலும் பார்க்க

தீயணைப்புத் துறையில் ஓட்டுநா் பணியிடங்களுக்கான பயிற்சித் தோ்வு

புதுவை மாநில தீயணைப்புத் துறைக்கான ஓட்டுநா் பணி தகுதித் தோ்வானது சனிக்கிழமை தொடங்கியது. புதுவையில் அரசு காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தீயணைப்புத் துறையில் வாகன ஓட்டு... மேலும் பார்க்க

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிா்க்குமாறு புதுவை மீன் வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து புதுவை மீன்வளத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: புதுச்சேரி ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரியில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன. தேசிய அளவில் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை, திருத்தம் செய்யும் பணி வரும் 2025 ஜனவரி ஒன்றாம் தேதியை, தகுதி ... மேலும் பார்க்க