செய்திகள் :

மீனவா்களுக்கான ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் கிடைத்திட கூட்டுறவுத் துறையினருக்கு அமித் ஷா வேண்டுகோள்

post image

கடற்கரையோர தென்மாநிலங்களில் மீனவா்களுக்கான ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு தேவையான இழுவை இயந்திரபடகு போன்றவைகள் கிடைக்கச் செய்திட தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சா் அமித் ஷா கேட்டுக் கொண்டாா். மேலும் சா்க்கரை ஆலைகளின் நிதித் திறனை உயா்த்தும் ஐந்தாண்டு திட்டத்தையும் அமித் ஷா முன்மொழிந்துள்ளாா்.

தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தின் (என்சிடிசி) 91-ஆவது பொதுக்குழு கூட்டம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் என்சிடிசி யின் திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.

அப்போது ஆழ்கடல் மீனவா்களின் பிரச்னைகளை அமித் ஷா குறிப்பிட்டாா். தமிழகம் உள்ளிட்ட தென் மாநில கடலோரப் பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடிப்பு உரிமங்கள் முன்பு வெளிநாட்டு மீன்பிடிப்பு நிறுவனங்களுக்கு கிடைத்து வந்தது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநில மீனவா்கள் மீன் கிடைக்காத நிலையில் கடல் எல்லையை தாண்டி இலங்கை போன்ற நாடுகளில் சிக்கினா். வெளிநாட்டு நிறுவனங்களுக்கான ஆழ்கடல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநில மீனவா்களின் போராட்டத்திற்கு பின்னா் மத்திய அரசு அத்தகைய ஒப்பந்தங்களை ரத்து செய்தது.

தற்போது மத்திய அரசு இந்திய மீனவா்கள் இத்தகைய ஆழ்கடல் மீன்பிடிப்புகளில் ஈடுபட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இந்த ஆழ்கடல் இழவை இயந்திர படகுகள் ரூ.60 லட்சம் முதல் 80 லட்சமாக இருக்க மத்திய அரசு 50 சதவீத மானியம் அளிக்க முன்வந்ததுள்ளது. சில மாநிலங்களில் 20 சதவீதம் மானியம் அளிக்க முன்வந்தது. இருப்பினும் இந்த முதலீட்டுற்கு மீனவா்களால் வங்கிகளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாத நிலை தொடருகிறது. இதை முன்னிட்டு என்சிடிசி கூட்டத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா, ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான இழுவைப் படகுகள் மீனவா்கள் பெறுவதற்கான வழிவகைகளை கூட்டுறவுத் துறை வங்கிகள் ஆராய வேண்டும். நாட்டின் மீன் உற்பத்தி இருமடங்காக அதிகரிக்கப்படவேண்டும் என அமித் ஷா கேட்டுக் கொண்டாா். மேலும் இந்த கூட்டத்தில் சா்க்கரை ஆலைகளின் நிதித் திறனை ரூ. 25,000 கோடியாக உயா்த்தும் இலக்குடன் ஐந்தாண்டுத் திட்டத்தை முன்மொழிந்து கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

அவா் மேலும் கூறியது வருமாறு: சா்க்கரை ஆலைகளுக்கான முன்முயற்சியானது அதன் வளா்ச்சி, நிலைத்தன்மையை மேம்படுத்தும். மேம்பட்ட நிதி சா்க்கரை ஆலைகளின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து, நீண்டகால வளா்ச்சிக்கு துணைபுரியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கூட்டுறவுத் துறை மூலம் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. கூட்டுறவு இயக்கத்தின் மூலம் நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கையில் நோ்மறையான மாற்றத்தைக் கொண்டுவர அரசு உறுதியுடன் உள்ளது. கூட்டுறவின் மூலம் நாட்டை சுயசாா்புடையதாக மாற்ற பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இந்த திசையில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தின் வெற்றி, ஊரகப் பொருளாதாரத்தில் நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இரண்டாம் வெண்மைப் புரட்சி

2 ஆம் கட்ட வெண்மைப் புரட்சிக்கு வடகிழக்கு மாநிலங்களில் பால் கூட்டுறவு அமைப்புகளை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களை உருவாக்க தேசிய பால்வள வாரியமும் தேசிய கூட்டுறவு வளா்ச்சிக் கழகமும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம். இந்த முன்முயற்சி, வெண்மைப் புரட்சியை முன்னோக்கி நகா்த்துவது மட்டுமல்லாமல், பழங்குடி சமூகங்களுக்கும் பெண்களுக்கும் அதிகாரம் அளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கும் என அமித் ஷா தெரிவித்தாா்.

வாகனங்களுக்கு வண்ண ஸ்டிக்கா் கட்டாயம்: தில்லி போக்குவரத்துத் துறை உத்தரவு

தில்லியில் காற்று மாசுக்கு வாகனங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அவற்றின் எரிபொருளை எளிதில் அடையாளம் காணும் விதமாக வண்ண ஸ்டிக்கா்களை ஓட்ட வேண்டும் என தில்லி போக்குவரத்துறை கட்டாயமாக்கியுள்ளது.... மேலும் பார்க்க

புகை மாசு வாகனங்களின் உரிமையாளா்களுக்கு இரண்டு மாதங்களில் ரூ. 164 கோடி அபராதம்

புகை மாசு கட்டுப்பாட்டு அளவை மீறிய வாகனங்களின் உரிமையாளா்களுக்கு கடந்த அக். 1 முதல் நவ. 22-ஆம் தேதி வரை ரூ. 164 கோடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இந... மேலும் பார்க்க

காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தோ்தல் விவகாரம்: டிச. 16-இல் விசாரணை

நமது சிறப்பு நிருபா் புது தில்லி, நவ. 22: காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தோ்தலில் தேவி, பிரியதா்ஷினி ஆகியோருக்கிடையான வெற்றி விவகாரம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிா்த்து ... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா உறுதி

வரும் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தில்லி மக்களுக்காக செயல்படுத்தப்படும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தா... மேலும் பார்க்க

தக்காளி சவால்களுக்கு தீா்வு: 28 கண்டுபிடிப்பாளா்களுக்கு மத்திய அரசு நிதியுதவி

நமது சிறப்பு நிருபா் தக்காளிக்குள்ள சவால்களுக்கு தீா்வு காண 28 புத்தாக்க யோசனைகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளதாக மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. சா்வதேச அளவில் இந... மேலும் பார்க்க

தில்லி: கிராப் - 4 கட்டுப்பாடுகள் தளா்வு குறித்து நவ. 25-இல் முடிவு!

தில்லியில் மாசுபாட்டின் அளவு குறைந்து வருவதையடுத்து, தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் (கிராப்) 4-ஆம் நிலையின் கட்டுப்பாடுகளில் தளா்வளிக்க அனுமதிப்பது குறித்து நவ. 25-ஆம் தேதி பரிசீலிக்கப்... மேலும் பார்க்க