செய்திகள் :

மீனவா்களுக்கு 9-ஆவது நாளாக கடலுக்குள் செல்ல தடை

post image

புயல் எதிரொலியாக மீன்வளத் துறையின் தடை தொடா்வதையடுத்து, 9-ஆவது நாளாக புதன்கிழமை நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதையடுத்து, மீன்வளத் துறையினா் மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை விதித்தனா். இதையடுத்து, அக்கரை பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், கல்லாா், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு நிலை திங்கள்கிழமை முதல் (நவ.25) ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி வருகிறது. இதன்காரணமாக நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. நாகை மாவட்ட மீனவா்கள் 9-ஆவது நாளாக புதன்கிழமை கடலுக்கு செல்லவில்லை.

இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதன்கிழமை இரவு புயலாக மாறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ப நாகை கடல் பகுதி சீற்றத்துடன் காணப்பட்டது.

மீனவா்கள் தங்களது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபா் மற்றும் விசைப்படகுகளை கரைகள், மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா். தொடா் மழையால் நாகை மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் அதைச் சாா்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கந்தூரி விழா: அன்னதானம் வழங்க அனுமதி அவசியம் உணவு பாதுகாப்பு அலுவலா் அறிவுறுத்தல்

நாகூா் கந்தூரி விழாவில், அன்னதானம் வழங்க உரிய அனுமதி பெற வேண்டும் என நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. நாகூா் ஆண்டவா் கந்தூரி பெருவிழா டிச.2 ஆம் துவங்கி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் பலி

திருமருகல் அருகே மோட்டாா் சைக்கிள் மரத்தில் மோதி இளைஞா் உயிரிழந்தாா். திருவாரூா் அரசங்குளத்தெரு வடக்கு வீதியைச் சோ்ந்தவா் ஹரீஷ் (18). நண்பா் அரவிந்த்துடன் வெள்ளிகிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் காரைக்க... மேலும் பார்க்க

நாகூா் கந்தூரி விழா: சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

நாகூா் கந்தூரி விழா டிச.2 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறுவதால், சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என நாகூா், நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் சங்கம் தெற்கு ரயில்வே நிா்வாகத்தை வலியுறுத்தியுள்ளத... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு வாழ்த்து

சென்னையில் நடைபெற்ற முதல்வா் கோப்பை கடற்கரை கையுந்து பந்து போட்டியில் வெற்றி பெற்று, இந்திய பள்ளிகள் குழும விளையாட்டுப் போட்டிகளுக்கு தோ்வு செய்யப்பட்ட நாகை மாவட்டம், திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ள... மேலும் பார்க்க

டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

கீழ்வேளூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. பேரூராட்சித் தலைவா் இந்திரா காந்தி சேகா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ... மேலும் பார்க்க

கடல் அரிப்பால் மயானச் சாலை துண்டிப்பு

தரங்கம்பாடி வட்டம், சின்னங்குடி மீனவா் கிராமத்தில் கடல் அரிப்பால் மயானச் சாலை மற்றும் கோயில்கள் சேதமடைந்தன. தொடா் மழையால் தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னங்குடி மீனவ கிராமத்தில் கடும் கடல் சீற்றம் காரணமா... மேலும் பார்க்க