கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்த பெண் கொலை: நிதி நிறுவன உரிமையாளா் கைது
மீன்கள் வரத்து சரிவால் விலை உயா்வு
மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலூரில் நிகழ் வாரமும் மீன்கள் வரத்து சரிந்து விலை அதிகரித்து காணப்பட்டது.
வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா். நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இதன்காரணமாக, இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து குறைந்து, விலையும் அதிகரித்து காணப்பட்டது.
அதன்படி, சங்கரா ரூ.250 முதல் ரூ.400, இறால் ரூ.500, விரால் ரூ.700 முதல் ரூ.800, நண்டு ரூ.600 முதல் ரூ.500, வவ்வால் மீன்கள் கிலோ ரூ.1,100, இறால் ரூ.400 முதல் 500-க்கும் , வஞ்சிரம் கிலோ ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டதுது என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.