பகுதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை
மு.க. முத்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக் குறைவால் காலமானார், அவருக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக் குறைவால் காலமான மு.க. முத்து உடல், சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய சகோதரருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்.
அவருடன், அமைச்சர், திமுக மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சில திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார் என்பதால், திரையுலகினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மு.க. முத்து உடல், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி - பத்மாவதி தம்பதியருக்குப் பிறந்தவர் மு.க. முத்து. கருணாநிதியின் கலையுலக வாரிசாகக் கருதப்பட்டவர், அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்டப் படங்களில் நடித்த்துள்ளார். பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரிதான் மு.க. முத்துவின் தாய் பத்மாவதி.