செய்திகள் :

மு.க. முத்துவின் உடல் நல்லடக்கம் !

post image

சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் மு.க. முத்துவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார். வயது மூப்பு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க. முத்து சனிக்கிழமை காலை 8 மணியளவில் இறந்ததாக அவரது மனைவி தெரிவித்தார்.

மு.க. முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு முத்தமிழறிஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஸ்டாலினுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம்! 30 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய மு.க. முத்து!

தனது சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையடுத்து சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Karunanidhi's eldest son M.K. Muthu laid to rest at Besant Nagar Crematorium.

தண்டவாள இணைப்பில் கோளாறு: ரயில்கள் தாமதம்

அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் திடீா் கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து சனிக்கிழமை ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. அரக்கோணம் மற்றும் புளியமங்கலம் ரயில்நிலையம் இடையே சனிக்கிழமை திடீரென தண்ட... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இடைநீக்கம்

உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டிஎஸ்பி சுந்தரேசனை இடைநீக்கம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். அடிப்படை... மேலும் பார்க்க

2026 பேரவைத் தேர்தலிலும் இபிஎஸ் படுதோல்வி அடைவார்: அமைச்சர் கே.என்.நேரு

2026 பேரவைத் தேர்தலிலும் இபிஎஸ் படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என... மேலும் பார்க்க

இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் !

மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்களை பத்திரப்பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறைத்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள்: இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள் இருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ”மக்களைக் காப்போம் தம... மேலும் பார்க்க

மு.க. முத்துவின் உடலைப் பார்த்து கதறி அழுத மு.க. அழகிரி!

மறைந்த மு.க. முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அவரது சகோதரர் மு.க. அழகிரி கண்ணீர்விட்டு அழுதார். மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையி... மேலும் பார்க்க