செய்திகள் :

முகநூலில் அறிமுகம்... வடிவேல் பட பாணியில் வீட்டில் தங்க நகைகள், செல்போனை திருடிய ஆசாமி!

post image

சென்னை திரு.வி.கநகரை சேர்ந்தவர் சுமித்ரா (52). (பெயர் மாற்றம்) இவருக்கு முகநூல் மூலம் சிவா என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். இவர்கள் இருவரும் செல்போனில் பேசி வந்திருக்கின்றனர். கடந்த 27.11.2024-ம் தேதி சுமித்ராவைச் சந்திக்க அவரின் வீட்டுக்கு சிவா சென்றிருக்கிறார். அதனால் இன்ப அதிர்ச்சியடைந்த சுமித்ரா, முகநூல் நண்பர் சிவாவுக்கு தேநீர், டிபன் கொடுத்திருக்கிறார்.

அதன்பிறகு இருவரும் பேசி கொண்டிருந்திருக்கிறார்கள். இதையடுத்து சுமித்ரா, அலுவலகம் செல்வதற்காக குளித்துவிட்டு வருவதாக சிவாவிடம் சொல்லிவிட்டு பாத்ரூம்பிற்கு சென்றிருக்கிறார். குளித்து விட்டு வெளியில் வர கதவை சுமித்ரா திறந்தபோது கதவு வெளிபக்கமாக பூட்டியிருந்தது. அதனால் சிவாவை அழைத்து கதவை திறக்க சுமித்ரா கூறியிருக்கிறார். நீண்ட நேரமாகியும் யாரும் வரவில்லை.

கைதான ஐயப்பன்

இதையடுத்து சுமித்ராவை பாத்ரூம் கதவை உடைத்து வெளியில் வந்திருக்கிறார். குளிக்க செல்வதற்கு முன்பு சாமி போட்டோ முன்பு சுமித்ரா கழற்றி வைத்திருந்த 4 மோதிரங்கள், தங்கச் செயின், தாலிச் செயின், வளையல் என 8 சவரன் தங்க நகைகளும் செல்போனும் திருட்டு போயிருந்தது. வீட்டிலிருந்த சிவாவையும் காணவில்லை. அப்போதுதான் முகநூல் மூலம் அறிமுகமாகிய சிவா, தங்க நகைகள், செல்போனை திருடியதை சுமித்ரா உணர்ந்தார்.

பின்னர் இதுகுறித்து திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் சுமித்ரா புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிவாவின் செல்போன் நம்பரைக் கொண்டு விசாரணை நடத்தினர். பின்னர் சிவாவை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் உண்மையான பெயர் ஐயப்பன் (39), குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து ஐயப்பனை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 21 கிராம் எடையுள்ள தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஐயப்பன் மீது ஏற்கெனவே திருச்சி, கோவையில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

முகநூல் மூலம் பெண்களிடம் அறிமுகமாகும் ஐயப்பன், அவர்களின் வீட்டுக்குச் சென்று கைவரிசை காட்டி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விளையாட்டு போட்டியில் பங்கேற்ற ஐடி பெண்... கணவர், மகள்கள் கண் முன் உயிரிழந்த சோகம்!

சென்னை பூந்தமல்லி ராமசந்திரா நகரைச் சேர்ந்தவர் மேத்தா (37). இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி ரேகா (33). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்தத் தம்பதி... மேலும் பார்க்க

சென்னை: மருத்துவமனையில் பத்திரிகையாளரைத் தாக்கிய போலீஸ் அதிகாரி; பதிவான FIR... நடந்தது என்ன?

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (Press Trust of India) ஊடகத்தின் பத்திரிகையாளர் பாலசுப்ரமணியன் என்பவர், உடல்நிலை சரியில்லாத தனது மகனை நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற... மேலும் பார்க்க

மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவரை பழிவாங்க துபாயிலிருந்து வந்த தந்தை; கொலைசெய்து வீடியோ வெளியீடு!

ஆந்திராவில் உள்ள அன்னமயா மாவட்டத்தை சேர்ந்த ஆஞ்சநேயா பிரசாத் என்பவர், குவைத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். அவர் தனது மனைவியையும் குவைத்திற்கு அழைத்துச்சென்றார். அவர்களுக்கு ஒரு மகள் இர... மேலும் பார்க்க

கோவை: கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு!

கேரள மாநிலம், பட்டனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம். இவர் தன் மனைவி ஷீபா, மருமகள் அலினா தாமஸ் மற்றும் 2 மாதமே ஆன பேரன் ஆருண் ஆகியோருடன் இன்று காலை பெங்களூருக்கு காரில் புறப்பட்டனர்.கோவை ... மேலும் பார்க்க

கோவில்பட்டி: மர்மமான முறையில் உயிரிழந்த 10 வயது சிறுவன்; துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸார்?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில், இளைய மகன் கருப்பசாமி, கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் 5-ம... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனையில் பண மோசடி - அதிகாரிகள் சிக்கிய பின்னணி!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் மோசடி நடந்திருப்பதாக மருத்துவமனையின் முதல்வருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவமனை தரப்பில் அந்த வளாகத்... மேலும் பார்க்க