107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
முதல் நாள் விளையாடிய ஆடுகளமா இது? ஆச்சரியத்தில் ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் பெர்த் ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (நவம்பர் 22) பெர்த்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தது. இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க: புதிய சாதனையை நோக்கி நகரும் பெர்த் டெஸ்ட்!
போட்டியின் முதல் நாளான நேற்று மட்டும் 17 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. இரண்டாம் நாளான இன்று (நவம்பர் 23) 3 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. இந்த 20 விக்கெட்டுகளையும் வேகப் பந்துவீச்சாளர்களே வீழ்த்தினர்.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று இந்திய அணி 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அசைக்க முடியாத அளவுக்கு நிலைத்து நின்று விளையாடினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை. அசைக்க முடியாத அளவுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.
ஆச்சரியமளிக்கும் ஆடுகளம்
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியில் ஒரு விக்கெட்டினைக் கூட வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறிய நிலையில், பந்துவீச்சாளர்கள் சரியாக பந்துவீசியும் விக்கெட் கைப்பற்ற முடியாதது ஆச்சரியமளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மெகா ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார்; முன்னாள் வீரர் நம்பிக்கை!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளம் இன்று உலர்ந்து காணப்பட்டது. மிகவும் விரைவாக ஆடுகளம் வறண்டுவிட்டது. முதல் நாளைக் காட்டிலும் இன்று ஆடுகளம் ஆச்சரியமளிக்கும் விதமாக இருந்தது. பந்தில் ஸ்விங் பெரிதாக இல்லை. முதல் நாளில் பந்துவீசியது போன்றே இன்றும் பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். இருப்பினும், அவர்களுக்கு ஆடுகளம் எந்த ஒரு விதத்திலும் உதவியாக இல்லை. கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் மிகவும் நன்றாக விளையாடினார்கள். இன்று முற்றிலும் மாறுபட்ட நாளாக இருந்தது. ஆடுகளத்தின் தன்மை மாறிவிட்டது என்றார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 218 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.