செய்திகள் :

முதல்வர் பதவிக்கு எந்த போட்டியும் இல்லை: தேவேந்திர ஃபட்னாவிஸ்!

post image

மஹாயுதி கூட்டணியில் முதல்வர் பதவிக்கு எந்தப் போட்டியும் இல்லை என பஜக தலைவர் தேவெந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 219 தொகுதிகளிலும், பாஜக 125 தொகுதிகளிலும், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 55 தொகுதிகளிலும், துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் பாஜக - சிவசேனை (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நிலை உருவாகியுள்ளது.

எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி 56 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனை 19 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.

இந்த வெற்றி குறித்து பேசிய மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், “இந்த வெற்றியின் மூலம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியே ‘உண்மையான சிவசேனை’ என்றும், அஜித் பவார் தலைமையிலான கட்சியே ‘உண்மையான் தேசியவாத காங்கிரஸ் கட்சி’ என்றும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மகராஷ்டிர மக்கள் எங்களுக்கு வரலாறு காணாத வெற்றியை வழங்கியுள்ளனர். மக்கள் அனைவரும் பிரதமர் மோடியின் பக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியை எங்களுக்கு அளித்த மக்களுக்கு நன்றி” என்று கூறினார்.

அடுத்த முதல்வர் பதவிக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் கூறி வரும் நிலையில் முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “மஹாயுதி கூட்டணியில் முதல்வர் பதவிக்கு எந்த போட்டியும் இல்லை. அடுத்தக்கட்ட முடிவுகளை கூட்டணிக் கட்சி தலைவர்கள் இணைந்து முடிவு செய்வார்கள்.

இது மஹாயுதி கூட்டணி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் ராம்தாஸ் அதாவலே ஆகியோரின் ஒற்றுமையின் வெற்றி” என்று அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: ராகுல் காந்தி

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அதுபற்றி விரிவாக ஆ... மேலும் பார்க்க

14 மாநில இடைத்தேர்தல் வெற்றி நிலவரம்!

இந்தியா முழுவதும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்குவங்கத்தில் 6, அசாமில் 5, பிகார், பஞ்சாபில் தலா 4... மேலும் பார்க்க

கார்கேவிடம் வாழ்த்து பெற்றார் பிரியங்கா காந்தி

வயநாட்டில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு கார்கே இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அசுர வெற்றி! ஜார்க்கண்ட்டை தக்கவைத்தது இந்தியா கூட்டணி!!

மகாராஷ்டிர மாநிலத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிடவும் பாஜக தலைமையிலான கூட்டணி அசுர வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ... மேலும் பார்க்க

நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் மோடி

மகாராஷ்டிரத்தில் நல்லாட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகாராஷ்டிரத்தில் நல்லாட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது. கூட... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியில் பிரியங்கா வெற்றி

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றி பெற்றுள்ளார். மேலும் பார்க்க