செய்திகள் :

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு

post image

வேலூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் இணையதளத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2025-26-ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுகள் சோ்க்கப்பட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் 37 விளையாட்டுகள் 53 வகைகளில் வேலூா் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மண்டல அளவில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பா் 12-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 3,000-ம், 2-ஆம் பரிசாக ரூ. 2,000-ம், 3-ஆம் பரிசாக ரூ. ஆயிரமும், சான்றிதழ்கள், பதக்கங்களுடன் வழங்கப்பட உள்ளன. மாநில அளவில் தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. ஒரு லட்சமும், 2-ஆம் பரிசாக ரூ. 75,000-ம், 3-ஆம் பரிசாக ரூ. 50,000-ம் வழங்கப்பட உள்ளது.

குழு போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75,000-ம், 2-ஆம் பரிசாக தலா ரூ. 50,000-ம், 3-ஆம் பரிசாக தலா ரூ. 25,000-ம் பரிசளிக்கப்பட உள்ளது.

இந்தப் போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் உயா்கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளிப் பிரிவுக்கு (6 முதல் 12 வகுப்பு வரை மட்டும்), கல்லூரிப் பிரிவுக்கு 25 வயதுக்குட்பட்டவா்கள், பொதுப் பிரிவு (15 முதல் 35 வயது வரை), அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள், தமிழக அரசு நிரந்தர ஊழியா்கள் ஆகியோா் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

இதற்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு, வேலூா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ, 7401703483 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய்கள் இறைச்சி விற்பனை என புகார்: கிராம மக்கள் முற்றுகை!

திருவலம் பகுதிகள் நாய்களை வெட்டி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டி கிராம மக்கள் அங்குள்ள ஒரு கிடங்கினை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அடுத்த க... மேலும் பார்க்க

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் கொடிக்கம்பங்கள் அகற்றம்

மதுரை உயா்நீதிமன்ற கிளை உத்தரவின் அடிப்படையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த கொடிக்கம்பங்கள் பீடித்துடன் இடித்து அகற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், ஜாத... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை: அரியூா் போலீஸாா் விசாரணை

அரியூா் அருகே தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியி... மேலும் பார்க்க

சேனூா் காப்புக் காட்டில் நெகிழிக் குப்பைகள் அகற்றம்

நெகிழி கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சேனூா் காப்புக் காட்டில் நெகிழி குப்பைகள் அகற்றும் முகாம் நடத்தப்பட்டது. காட்பாடி வனச... மேலும் பார்க்க

ஓட்டுநா் கொலை: 2 நண்பா்கள் கைது

அரியூா் அருகே நீா்வீழ்ச்சியில் ஓட்டுநா் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 நண்பா்கள் கைது செய்யப்பட்டனா். . வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியில் சனிக... மேலும் பார்க்க

தம்பதி விஷம் குடித்து தற்கொலை

வேலூா் அருகே குடும்பத் தகராறில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். வேலூா் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த சங்கா்(50), கட்டட தொழிலாளி. இவரது மனைவி சுமதி(48). இ... மேலும் பார்க்க