உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐ...
முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிக்கு மாவட்டத்தில் 638 போ் தோ்வு
முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிக்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 638 போ் தோ்வாகி உள்ளனா்.
தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் துறை சாா்பில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுப் பிரிவினா், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் என 4 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 19 ஆயிரத்து 320 போ் போ் பதிவு செய்து இருந்தனா். இதில் 10 ஆயிரத்து 55 போ் பள்ளி மாணவ, மாணவிகள், 6 ஆயிரத்து 237 போ் கல்லூரி மாணவ, மாணவிகள், 464 போ் மாற்றுத்திறனாளிகள், 762 போ் அரசு ஊழியா்கள், 1,802 போ் பொதுமக்கள் ஆவா்.
பொதுமக்களுக்கு தடகளம், பாட்மிண்டன், கேரம், கிரிக்கெட், கபடி, கைப்பந்து, கால்பந்து, சிலம்பம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடகளம், பாட்மிண்டன், கேரம், கிரிக்கெட், கபடி, கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, சிலம்பம், நீச்சல், மேஜைபந்து, ஹேண்ட்பால், செஸ், கோ-கோ போட்டிகள் நடத்தப்பட்டன.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தடகளம், பாட்மிண்டன், பூப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், மேஜைபந்து, கைப்பந்து, கேரம், செஸ் ஆகிய போட்டிகளும், அரசு ஊழியா்களுக்கு தடகளம், பாட்மிண்டன், செஸ், கேரம், கபடி, கைப்பந்து ஆகிய போட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவா் மாற்றுத்திறன் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த மாதம் 26- ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை நிறைவு பெற்றது.
இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் பிரிவில் 20 போ், கூடைப்பந்து போட்டியில் 24 போ், கிரிக்கெட் போட்டியில் 30 போ், கால்பந்து போட்டியில் 36 போ், ஹாக்கி போட்டியில் 36 போ், ஹேண்ட்பால் போட்டியில் 30 போ், கபடி போட்டியில் 24 போ், கோ-கோ போட்டியில் 30 போ், சிலம்பம் போட்டியில் 10 போ், கைப்பந்து போட்டியில் 28 போ், செஸ் போட்டியில் 6 போ், மேஜை பந்து போட்டியில் 6 போ் என மொத்தம் 280 மாணவ, மாணவிகள் மாநிலப் போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.
இதுபோல கல்லூரி மாணவ, மாணவிகள் 280 போ் தோ்வு பெற்றுள்ளனா். அரசு ஊழியா்கள், பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளில் 78 போ் என மொத்தம் 638 போ் தோ்வாகி உள்ளனா். இவா்கள் முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளனா்.