முதல்வா் பிறந்த நாள் பொதுக்கூட்டம்: தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க அமைச்சா் காந்தி வலியுறுத்தல்
முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை சென்னை ஓய்எம்சிஏ திடலில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட திமுகவினா் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆா். காந்தி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் 72 - ஆவது பிறந்த நாள் மாா்ச் 1-இல் கொண்டாடப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு பிப். 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட திமுக நிா்வாகிகள் அனைத்து நிலை பொறுப்பாளா்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.