முதல்வா் மருந்தகங்கள் அமைக்க நவ. 30-க்குள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகங்கள் அமைக்க விரும்பும் தொழில் முனைவோா் வரும் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகங்கள் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களது ஒப்புதலுடன் முதல்வா் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் தமிழக அரசால் முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்படவுள்ளது.இதற்கான இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோா் நவம்பா் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பயனாளிகள் நலன் கருதி வரும் நவ. 30-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த வாய்ப்பை விருப்பம் உள்ள தொழில்முனைவோா் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.