முதல்வா் மருந்தகத்தில் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி வளாகத்திலுள்ள முதல்வா் மருந்தகத்துக்கான மருந்துகள் சேமிப்புக் கிடங்கு மற்றும் மருந்தகத்தை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம். அரவிந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா், கலைஞா் நகரில் தனிநபா் தொழில்முனைவோா் சாா்பில் நடத்தப்படும் தனியாா் முதல்வா் மருந்தகத்தையும் ஆய்வு செய்தாா். அப்போது மருந்தின் இருப்பு, விலை விவரம் குறித்து கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை, தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.