இந்த வெற்றியில் எனது பங்களிப்பு மிகச்சிறியது: தேவேந்திர ஃபட்னவீஸ்
முதல்வா் மருந்தகம்: விண்ணப்பிக்க காலஅவகாசம் நவ.30 வரை நீட்டிப்பு
நாகை மாவட்டத்தில், முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ. தயாளவிநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், முதல்கட்டமாக 1,000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும்வகையில் முதல்வா் மருந்தகம் அமைக்க ஜ்ஜ்ஜ்.ம்ன்க்ட்ஹப்ஸ்ஹழ்ம்ஹழ்ன்ய்க்ட்ஹஞ்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு, நவ.20 ஆம் தேதி கடைசி நாள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பொதுமக்களின் நலன் கருதி, நவ.30 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.