மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள்
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் 72 திமுக மூத்த நிா்வாகிகள் தம்பதிகள் வியாழக்கிழமை கெளரவிக்கப்பட்டனா் (படம்).
உத்தரமேரூா் ஒன்றியம் சாலவாக்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு தெற்கு மாவட்ட செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ தலைமை வகித்து 72 கிலோ கேக் வெட்டினாா். முன்னதாக மூத்த நிா்வாகிகள், தம்பதிகள் 72 பேருக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
நிகழ்வில் ஒன்றிய செயலாளா் குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் சத்யா சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினா் சிவராமன், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் சேகா், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.