சென்னை ஃபைல்ஸ் - முதல்பக்கம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
முத்தரப்பு தொடர்: பிரையன் பென்னட் அரைசதம்; தென்னாப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு!
முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.
பிரையன் பென்னட் அரைசதம்; 145 ரன்கள் இலக்கு
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் 43 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக ரியான் பர்ல் 36* ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
தென்னாப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஸ்ச் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லுங்கி இங்கிடி, நண்ட்ரே பர்கர் மற்றும் பீட்டர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.
இதையும் படிக்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் சேர்ப்பு!