`முந்திரி, ஆவின் நெய்' - தமிழ்நாடு அரசின் மூன்று பொங்கல் தொகுப்புகள்; பொருட்கள் இவைதான்
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு 'கூட்டுறவு பொங்கல்' என்ற பெயரில் பொங்கல் தொகுப்புகளை விற்பனை செய்ய உள்ளது.
மூன்று தொகுப்புகள்...
இந்தத் தொகுப்புகள் மூன்று வகையாக விற்பனை ஆக உள்ளது. அவை...
ரூ.199-க்கு 'இனிப்பு பொங்கல் தொகுப்பு',
ரூ.499-க்கு 'சிறப்பு பொங்கல் தொகுப்பு',
ரூ.999-க்கு 'பெரும் பொங்கல் தொகுப்பு'.
எங்கு கிடைக்கும்?
இந்தத் தொகுப்புகள் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுய சேவை பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையம் போன்ற கூட்டுறவு நிறுவனங்களில் கிடைக்கும்.
என்னென்ன பொருட்கள்?
மண்டலம் வாரியாக 1 லட்சம் பொங்கல் தொகுப்புகள் கொடுக்கப்பட உள்ளன.
இந்த தொகுப்புகள் குறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவரிடம் பேசியப்போது, "இதே மாதிரி கொரோனா சமயத்துலையும் தொகுப்புகளை விற்பனைக்கு தந்தாங்க. ஆனா, மக்கள் அதை அதிகமா வாங்கல.
மக்கள் முதல்ல எதிர்ப்பார்க்கறது 'தரத்தை' தான். தரம் நல்லா இருந்தா மக்கள் வாங்குவாங்க. 'மக்கள் வாங்குவாங்களா... இல்லையா'னு தொகுப்பு வந்ததும் தான் தெரியும்" என்று கூறினார்.