முனைஞ்சிப்பட்டி அரசுப் பள்ளி மாணவா் ஓவியப் போட்டியில் முதலிடம்
பள்ளிகளுக்கிடையேயான ஓவியப் போட்டியில் முனைஞ்சிப்பட்டி குருசங்கா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் முதல் பரிசு வென்றாா்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான ஓவியப் போட்டி நாகா்கோவில் ஆதா்ஷ் வித்யா கேந்திர மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், முனைஞ்சிப்பட்டி குருசங்கா் அரசு மேல்நிலைப் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவா் கோசல்ராம் முதல் பரிசு வென்றாா். அவரை தலைமையாசிரியா், ஆசிரியா்கள் பாராட்டினா்.