முன்னாள் படைவீரா்களுக்கு மாா்ச் 4 இல் குறைகேட்புக் கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 4-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்கள், படையில் பணிபுரியும் வீரா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம், முதல்வரின் காக்கும் கரங்கள் விழிப்புணா்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தரைத்தளத்தில் உள்ள அறை எண் 20-இல் மாா்ச் 4-ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்கள், படைவீரா்களைச் சாா்ந்தோா்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக இரட்டைப் பிரதிகளில் முகாம் நாளன்று காலை 10 மணிக்குள் தெரிவிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.