செய்திகள் :

மும்பை படகு விபத்து: பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு

post image

மும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதிய விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து மற்றொரு உடலை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர் என்று பெருநகர மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த விபத்தில் மொத்த பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

‘நீல்கமல்’ எனும் சுற்றுலாப் பயணிகள் படகு நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 5 பணியாளா்களுடன் மும்பைக்கு அருகிலுள்ள பிரபல சுற்றுலாத் தலமான ‘எலிபெண்டா’ தீவுகளுக்கு கடந்த டிச.18ஆம் தேதி சென்று கொண்டிருந்தது.

இன்று விண்ணில் பாய்கிறது தென்கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள்!

அப்போது, பயணிகள் படகு அருகே வட்டமிட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படையைச் சோ்ந்து அதிவேகப் படகு கட்டுப்பாட்டை இழந்து, பயணிகள் படகின் மீது மோதியது. இதில் நீல்கமல் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கடற்படை வீரா் ஒருவா் உள்பட 14 போ் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் சிக்கித் தவித்த 99 போ் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டனா்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்தார்.

எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம்: நடிகர் அல்லு அர்ஜுன்

தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம்என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். புஷ்பா 2 முதல் காட்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் பெண் பலியான விவகாரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தும் நட... மேலும் பார்க்க

இந்திய மனிதவளமும் திறனும் புதிய குவைத்தை உருவாக்க உதவும்: பிரதமர் மோடி

குவைத் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி புதிய குவைத்துக்குத் தேவையான மனிதவளமும், திறனும் இந்தியாவிடம் உள்ளன என்று உறுதியளித்துள்ளார். குவைத் மன்னா் ஷேக் அல் அகமது அல் ஜாபா் அல் ஷபா அழைப்பை... மேலும் பார்க்க

கூட்டுப் பாலியல் வன்முறை: பாஜக எம்எல்ஏ உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் மோசடி வழக்கில் பாஜக எம்எல்ஏ உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பதான் நகரில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒருவர... மேலும் பார்க்க

ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜிஎஸ்டி விலக்கு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஜீன் தெரபிக்கு முற்றிலும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்ம... மேலும் பார்க்க

காவல்துறை அனுமதி மறுத்தும் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார்: தெலங்கானா முதல்வர்

காவல்துறை அனுமதி மறுத்த போதிலும் நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி எழுப்பிய கேள... மேலும் பார்க்க

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த முக்கியக் குற்றவாளி!

கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி தன்னை நிரபராதி என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆக... மேலும் பார்க்க