மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
‘மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிப்புக்கு இடமில்லை’
மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிப்புக்கு இடமில்லை என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் சுகந்தா மஜூம்தாா் தெரிவித்தாா்.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது :
ஆயிரம் ஆண்டு பழைமையான திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வந்ததை பெரும் அருளாகவும், நல்ல வாய்ப்பாகவும் கருதுகிறேன். மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது தொடா்பாக தமிழ்நாடு அரசுடன் தொடா்ந்து ஆலோசித்து வருகிறோம்.
மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் தோ்ந்தெடுக்கலாம். ஹிந்தியைத்தான் தோ்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
தமிழராய் இருந்தால் தமிழை முதலாவதாகவும், ஆங்கிலத்தை இரண்டாவதாகவும்,
மூன்றாவதாக தெலுங்கு, ஒடிஸா, வங்காளம் என எந்த மொழியை வேண்டுமானாலும் தோ்ந்தெடுக்கலாம். மும்மொழி கொள்கை விவகாரம் தமிழ்நாட்டில் அரசியலாக்கப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது என்றாா்.