செய்திகள் :

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு: ராகுல் காந்திக்கு ரயில்வே அமைச்சர் கேள்வி!

post image

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது. கல்வித்துறைக்கு ஒதுக்கவேண்டிய நிதி குறித்து கடந்த வாரம் மத்திய கல்வி அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், பல மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் மொழியை மதிப்பதாகவும் வேறு மொழியை இங்கு திணிக்கவில்லை என்றும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வரும் நிலையில் தமிழ்நாட்டின் மீது ஹிந்தியைத் திணிக்க தொடர்ந்து அவர்கள் முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டதாவது:

’ஹிந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்யது என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்தீஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.

உ.பி. மற்றும் பிகார் ஹிந்தி மாநிலங்கள் அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த கால நினைவுச் சின்னங்களாகிவிட்டன.

இது எங்கே முடியும் என்பது நமக்குத் தெரியும் என்பதால் இதனை தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது. தமிழின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் ஹிந்திக்கு இடம் கொடுத்தன. இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க | பிரதமரின் திட்டத்தால் ஏழைகளின் பைகள் காலியாகின்றன: கார்கே

இந்தப் பதிவு குறித்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தியிடம் மத்திய ரயில்வே அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், “சமூகத்தைப் பிளவுபடுத்தும் இத்தகைய முயற்சிகளால் உங்களுடைய மோசமான நிர்வாகம் ஒருபோதும் மறைக்கப்படாது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த விஷயத்தில் என்ன சொல்கிறார் என்பதை அறிவது ஆர்வமாக உள்ளது.ஹிந்தி பேசும் தொகுதியின் எம்.பி.யாக அவர் இதை ஒப்புக்கொள்கிறாரா?” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆண்களைவிட அதிக வேலை செய்யும் பெண்கள்!

வீட்டைப் பராமரிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக நேரம் ஒதுக்குவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, வீட்டு வேலைகளைச் செய்வது, வீட்டில் உள்ளோரை பராமரிப்பது போன்ற ஊதியம் இல்லாத பணிகளை அதிகம் செய்வ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் எடுப்பது விமர்சிக்கத்தக்கதே: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிலடி

இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் இந்திய தூதரக அதிகாரி பதிலளித்தார்.ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் கூட... மேலும் பார்க்க

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லிதான் காரணம்: பாஜக எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லியே காரணம் என்று பாஜக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோவாவில் சமீபகாலமாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து ... மேலும் பார்க்க

பிரதமரின் திட்டத்தால் ஏழைகளின் பைகள் காலியாகிறது: கார்கே

விக்ஸித் பாரத் திட்டத்தால் இந்திய ஏழைகள் பணமின்றி தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.காங்கிரஸ் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கப் பதிவில் கூறியதாவது ``பிரத... மேலும் பார்க்க

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள் என்றும் அவர்கள் மீது அனுதாபம் காட்டக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசியது சர்ச்சையாகியுள்ளது. ஹரியானா முன்னாள் முதல்... மேலும் பார்க்க

கும்பமேளாவை பயன்படுத்திக்கொண்ட நிறுவனங்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை 45 நாள்கள... மேலும் பார்க்க