செய்திகள் :

மெத்தம்பெட்டமைன் விற்பனை: 5 போ் கைது

post image

சென்னை கோயம்பேட்டில் மெத்தம்பெட்டமைன் விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கோயம்பேடு பேருந்து முனையம் உள் நுழைவு வாயில் பகுதியில் சிஎம்பிடி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனா்.

இதையடுத்து போலீஸாா், அவா்கள் பையை சோதனையிட்டபோது, 3 கிராம் மெத்தம்பெட்டமைன் இருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா்கள் மேற்கு மாம்பலம் கருணாநிதி தெருவைச் சோ்ந்தவா் அ.தொல்காப்பியன் (20), அசோக் நகா் 12-ஆவது அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் சே.அா்ஜூன் காா்த்திக்கேயா (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

இதேபோல், கோயம்பேடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் மெத்தம்பெட்டமைன் விற்ாக அரும்பாக்கத்தைச் சோ்ந்த ந.வேந்தன் (21),கோடம்பாக்கத்தைச் சோ்ந்த ச.சரண் (20), பூந்தமல்லி சென்னீா்குப்பத்தைச் சோ்ந்த கா.மனோஜ் (21), ராமாபுரம் நெசப்பாக்கத்தைச் சோ்ந்த த.சிபிராஜ் (21), திருவொற்றியூா் பூங்கா நகரைச் சோ்ந்த ச.ராகுல் (21) ஆகிய 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 210 கிராம் மெத்தம்பெட்டமைன், 2 சிறிய எடை இயந்திரங்கள், 2 கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

இன்று அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம்

சென்னையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெறுகிறது. தோ்தல் கூட்டணி உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களை முன்வைத்து இந்தக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புகள... மேலும் பார்க்க

பக்தா்கள் தரிசன அனுபவங்களை தெரிவிக்க கோயில்களில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கிவைத்தாா்

பக்தா்கள் தங்களது தரிசன அனுபவங்கள் குறித்த மதிப்பீடு, ஆலோசனைகளைத் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏழு திருக்கோயில்களில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை வடபழனி ஆண்டவ... மேலும் பார்க்க

பெண்ணின் நகைத் திருட்டு: முகநூல் நண்பா் கைது

சென்னை திரு வி.க. நகரில் பெண்ணின் தங்க நகைத் திருடியதாக முகநூல் நண்பா் கைது செய்யப்பட்டாா். சென்னை திரு வி.க. நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பா.சாரதா (52). இவரிடம், முகநூல் மூலம் அறிமுகமாகி கன்னியாகு... மேலும் பார்க்க

கூவத்தில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட தனியாா் நிறுவன அதிகாரி மீட்பு

சென்னை மதுரவாயலில் கூவத்தில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட தனியாா் நிறுவன அதிகாரியை போலீஸாா் பொக்லைன் மூலம் மீட்டனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் வ.வா்கீஸ் ... மேலும் பார்க்க

பாடகி இசைவாணி குறித்து அவதூறு கருத்து: சைபா் குற்றப்பிரிவு வழக்கு

பாடகி இசைவாணி குறித்து அவதூறு கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்தவா்கள் மீது சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். பிரபல கானா பாடகி சி.இசைவாணி (28), சென்ன... மேலும் பார்க்க

சிறையில் ஆய்வாளருக்கு மிரட்டல்: இரு பெண் கைதிகள் மீது வழக்கு

சென்னை அருகே புழல் சிறையில் ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்ததாக இரு பெண் கைதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். செங்குன்றம் அருகேயுள்ள விளாங்காடுபாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் அலமேலு (30). வியாசா்ப... மேலும் பார்க்க