மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி அருகே நவல்பட்டில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கைக்கோல்பாளையம் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி மகன் பொன் காா்த்தி (24). பொறியியல் பட்டதாரியான இவா், நவல்பட்டு ஐடி பூங்காவில் மென்பொறியாளராகப் பணியாற்றி வந்தாா்.
சக ஊழியா்கள் மூவருடன் சோ்ந்து நவல்பட்டு அண்ணா நகா் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு தங்கி அவா் வேலை பாா்த்து வந்தாா். கடன் பிரச்னையால் பொன்காா்த்தி அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த வீட்டில் புதன்கிழமை இரவு பொன் காா்த்தி தனியாக இருந்துள்ளாா். அங்கு தங்கியிருக்கும் இளையராஜா சொந்த ஊருக்கு சென்று விட்டு வியாழக்கிழமை திரும்ப வந்து பாா்த்தபோது, மாடி அறையில் பொன் காா்த்தி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் அங்கு வந்த நவல்பட்டு போலீஸாா், பொன்காா்த்தியின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து தற்கொலைக்கு கடன் பிரச்னைதான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரித்து வருகின்றனா்.