செய்திகள் :

மேட்டுப்பாளையம் அருகே நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்!

post image

மேட்டுப்பாளையம் அருகே நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி காரால் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிட்டே பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ். இவரது மனைவி முத்துலட்சுமி.

இருவரும் தங்களது தோட்டத்தில்விளைந்த காய்கறிகளை ஆம்னி காரில் ஏற்றிக்கொண்டு விற்பனைசெய்வதற்காக மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் பின் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது.

ஃபென்ஜால் புயல்: வெள்ளத்தில் மிதக்கும் புதுவை!

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி இரண்டு பேரும் உடனே சுதாரித்துக் கொண்டு காரில் இருந்து கீழே இறங்கினர். சில நிமிடங்களில் காரில் தீ மளமள என பிடித்து எரியத் தொடங்கியது.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதம் ஆகியது. இந்த தீ விபத்தில் கணவன், மனைவி இரண்டு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விழுப்புரம், கடலூரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின்

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதோடு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மாநில அவசரகால செயல்பாட்... மேலும் பார்க்க

3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: இன்றிரவு வரை கனமழை நீடிக்கும்!

ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில், நள்ளிரவு 11.30 மணியிலிருந்து 12.30 மணிக்குள் மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இந்த நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட சு... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: இபிஎஸ்

ஃபென்ஜால் புயல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயல் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஒரு வார காலமாக ப... மேலும் பார்க்க

வலுவிழந்தது ஃபென்ஜால் புயல்

கரையைக் கடந்த ஃபென்ஜால் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென்மேற்... மேலும் பார்க்க

திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார்: சென்னை திரும்பிய அண்ணாமலை பேட்டி

திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார் என்று நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். மூன்று மாத கால லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை ஞாய... மேலும் பார்க்க

நடுக்கடலில் மாயமான தூத்துக்குடி மீனவர்கள் 6 பேர் மீட்பு

நடுக்கடலில் மாயமான திரேஸ்புரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சர்வதேச எல்லை அருகே தத்தளித்த 6 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டுள்ளனர். படகில் இருந்து எரிபொருள் வெளியேறியதால் 6 மீனவர... மேலும் பார்க்க