மேட்டூர் அணை நிரம்பியது! வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!
இந்த ஆண்டில்,மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை மூன்றாவது முறையாக எட்டியுள்ளதால், காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், அணையின் நீர் மட்டம் அவ்வப்போது நீர் வரத்துக்கு ஏற்ப குறைந்தும் நிரம்பியும் வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக இருந்து நிலையில், அணைக்கான நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 28,784 கன அடியில் இருந்து 31,500 கன அடியாக அதிகரித்து வருகிறது. நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.
நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 31,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் அணை நிரம்பியதையடுத்து, 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கபட்டதால், காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய் துறை சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!