செய்திகள் :

மேட்டூர் உபரி நீர் திட்டத்தினை பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டுவர வேண்டும்: கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கம்

post image

சேலம்: விவசாயத்துக்கு பயன்படும் வகையில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை பனமரத்துப்பட்டி ஏரிக்கு செயல்படுத்தக் கோரி கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பனமரத்துப்பட்டி சந்தைப்பேட்டையில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சேலம் மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சுகுமார் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட விளக்க உரை நிகழ்த்தினார் .

அப்போது, பனைமரத்துப்பட்டி ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை விவசாயத்துக்கு பயன்படும் வகையில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தினை பனமரத்துப்பட்டு ஏரிக்கு கொண்டுவர வேண்டும்.

பனமரத்துப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் பயிரிடப்படும் அரளி பூவிற்கு குளிர்சாதன கிடங்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரியிலிருந்து உபரி ஏரிகளுக்கு தண்ணீர் வரும் வாய்க்காலில் உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும்.

ஆத்தூரில் உள்ள கால்நடை பூங்காவிற்கு மல்லூர் வழியாக செல்லும் ராட்சச குழாயின் வழியாக மேட்டூரில் இருந்து நீரை கொண்டு செல்லும் நிலையில் அந்த நீரைக் கொண்டு சிறு குறு ஏரிகளை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களின் கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்! எங்கே? எப்போது?

Regarding the implementation of the Mettur surplus water project to Panamarathupatti Lake for agricultural use...

ஜூலை 23-இல் பிரிட்டன், மாலத்தீவுக்கு மோடி 4 நாள் சுற்றுப்பயணம்

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை(ஜூலை 23) முதல் 26 வரை 4 நாள்களுக்கு பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக மேற்கொள்ளவுள்ளார்.இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழகத்தை திரட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அணி வெற்றி பெற ஓரணியில் தமிழகத்தை திரட்ட வேண்டும் என்று அக்கட்சி இளைஞரணியினருக்கு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் விடுத்துள்ள... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கருத்துக்கு பெ. சண்முகம் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கண்ட... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு!

பென்னாகரம்: கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட வலியுறுத்தி உள்ளோம்: டி.ஆா்.பாலு

புது தில்லி: மத்திய அரசு முடக்கி வைத்துள்ள கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம் என்று திமுக மக்களவை குழு தலைவா் டி.ஆா்.பாலு கூறினாா்.... மேலும் பார்க்க

ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி காா்த்திகை விரதத்தையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயிலில்களில் ஏராளமான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் முக்கிய விசேஷ நாட்களில் ஒன்றாக கொண்டாடப... மேலும் பார்க்க