செய்திகள் :

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் வெடிப்பு: மின் உற்பத்தி பாதிப்பு

post image

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் முதலாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 810 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல்பட்டு வருகிறது.

இதன்மூலம் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூா் அனல் மின் நிலையத்தின் இரண்டு பிரிவுகளிலும் 1,440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இதையும் படிக்க |ராகுல் கொடுத்த தேசியக் கொடியை வாங்க மறுத்த ராஜ்நாத் சிங்!

இந்த நிலையில், புதன்கிழமை மேட்டூா் அனல் மின் நிலையத்தின் முதலாவது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக 210 மெகா வாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. மற்ற அலகுகளில் தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

கொதிகலன் குழாய் வெடிப்பை சரி செய்யும் பணியில் பொறியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். கொதிகலன் குழாய் வெடிப்பு சரி செய்யப்பட்டு மீண்டும் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

உணவு, குடிநீரின்றி 65,000க்கும் மேற்பட்டோர் தவிப்பு: ஐ.நா.

காஸா: காஸாவின் வடக்கு பகுதியினுள் வெளியிலிருந்து நுழையும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தினால் தடுக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான காஸா மக்கள் அத்தியாவசிய உதவிகளின்றி தவிப்பதாக ஐக்கிய ந... மேலும் பார்க்க

மோசமான வானிலை: சென்னையில் 13 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னையில் புதன்கிழமை காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை தீபம்: சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்- அமைச்சர் சேகர்பாபு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ எனவும்,பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது குறித்து அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல் - ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன்பு புதன்கிழமை விவசாயிகள் சாலை மறியல், ஆட்ச... மேலும் பார்க்க

ஜன. 13-ல் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் ஜன. 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திரு உத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் 2025 ஜன. 13 ஆம் தேதி உள... மேலும் பார்க்க