செய்திகள் :

மேற்கு வங்கம்: பாபர் மசூதி கட்ட மம்தா கட்சி எம்.எம்.ஏ பூமி பூஜை; ராமர் கோயில் கட்ட பாஜக பூமி பூஜை

post image

மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.எம்.ஏ. ஹிமாயூன் கபீர் முர்ஜிதாபாத்தில் பாபர் மசூதியை கட்டுவோம் என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

திட்டமிட்டபடி அயோத்தியில் பாபர் மசூதி இடப்பட்ட நாளில் பாபர் மசூதி கட்ட பூமி பூஜை செய்யப்படும் என்று கபீர் தெரிவித்து இருந்தார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

சொன்னபடி நேற்று முர்ஜிதாபாத்தில் உள்ள ராஜீவ் நகரில் அயோத்தியில் இருந்தது போன்ற பாபர் மசூதியை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவும், பாபர் மசூதி கட்ட நன்கொடை கொடுக்கவும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவர்கள் “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டனர். விழாவிற்கு வந்த மத போதகர்களின் முன்னிலையில் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலீஸாரோ அல்லது ரிசர்வ் போலீஸ் படையோ பூமி பூஜையை தடுக்க முன்வரவில்லை.

பாபர் மசூதி கட்ட பூமி பூஜை
பாபர் மசூதி கட்ட பூமி பூஜை

பாபர் மசூதிக்கு பூமி பூஜை செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“எம்.எல்.ஏ. ஹிமாயூன் கபீர் மூலம் முஸ்லிம்களை மம்தா பானர்ஜி திருப்தி படுத்த முயற்சி செய்துள்ளார். ஹிமாயூன் கபீர் ஆதரவாளர்கள் பாபர் மசூதி கட்ட செங்கல் எடுத்துச் செல்கிறார்கள்.

அதோடு மேற்கு வங்க போலீஸார் தனக்கு துணையாக இருப்பதாக ஹிமாயூன் கபீர் தெரிவித்துள்ளார். இப்போது ஹிமாயூன் கபீரை சஸ்பெண்ட் செய்துள்ள மம்தா பானர்ஜி, இந்துக்களை ஹிமாயூன் கபீர் மிரட்டியபோது ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.

போட்டியாக ராமர் கோயில்

பாபர் மசூதிக்கு போட்டியாக முர்ஜிதாபாத்தில் ராமர் கோயிலை கட்டப்போவதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மத்திய அமைச்சர் சுகந்தா அளித்த பேட்டியில், “எங்களது கட்சி முர்ஜிதாபாத்தில் ராமர் கோயிலை கட்டுவோம்” என்றார்.

முர்ஜிதாபாத் பா.ஜ.க நிர்வாகி சர்கார், தனது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து ராமர் கோயில் கட்ட பூமி பூஜை செய்துள்ளார். இதில் மத்திய அமைச்சர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

மேற்கு வங்க மக்கள் தங்களது இல்லங்களில் செங்கலை வைத்து பூஜை செய்து கொடுப்பார்கள் என்றும், அந்த செங்கலை கொண்டு ராமர் கோயில் கட்டப்படும் என்றும் சர்கார் தெரிவித்துள்ளார்.

அதோடு, மேற்கு வங்கத்தின் மால்டா நகரில் இருக்கும் ஆதினா மசூதியை மீட்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் ஆதித்நாத் கோயில் இருந்ததாக மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். 1867ம் ஆண்டு அந்த இடத்தில் கோயில் இருந்தது என்பதற்கு ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயிலுக்கு பூமி பூஜை

அரசியல் நோக்கம் கொண்டது

மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்ட திட்டமிட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அயோத்தி பாபர் மசூதி டிரஸ்ட் தெரிவித்துள்ளது.

இது குறித்து அயோத்தி பாபர் மசூதி டிரஸ்ட் செயலாளர் ஆதார் ஹுசேன் அளித்த பேட்டியில், “அரசியல் நோக்கத்தோடும், பிரிவினை நோக்கத்தோடும் பாபர் மசூதி கட்டப்படுகிறது. எம்.எல்.ஏ. கபீர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். அயோத்தி பாபர் மசூதி சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே இனி பாபர் பெயரில் செய்யும் எதுவும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும்” என்று தெரிவித்தார்.

`பால் பவுடருக்கு பதில் க்யூப்' - ஜப்பானில் அறிமுகமான 'பேபி ஃபார்முலா க்யூப்ஸ்' - என்ன சிறப்பு?

வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போன ஜப்பான், புதிய 'கியூப்' வடிவ பாலை அறிமுகப்படுத்தியுள்ளது.​ இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பொதுவாக, பச்சிளங் குழந்தைகளுக்குத்... மேலும் பார்க்க

ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்திய ஏர் இந்தியா விமானம் -காரணம் என்ன?

பராமரிப்புப் பணிக்காக கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 737-200 ரக விமானம், கவனக்குறைவால் அங்கேயே 13 ஆண்டுகள் கைவிடப்பட்டதால் தற்போது அதற்கு ரூ.1 கோட... மேலும் பார்க்க

ரெஸ்டாரண்ட் கேஸ் கவுண்டரில் நாய்; `வாடிக்கையாளர்களை அதுக்கு நல்ல தெரியும்' - வைரலான நாயின் கதை

மும்பையின் தென்பகுதியில் இருக்கும் போர்ட் பகுதியில் பிரிட்டானியா அண்ட் கோ என்ற இரானி ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த ரெஸ்டாரண்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரெஸ்டாரண்டில் அங்கு... மேலும் பார்க்க

உங்க வீட்ல சின்னப் பிள்ளைகள் இருக்காங்களா? அப்போ இத படிங்க!

நெல்லையில், ரிவர்ஸ் எடுக்கப்பட்ட கார் மோதி 5 வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம், செய்தியை பார்த்தவர்களுக்கும், வாசித்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக... மேலும் பார்க்க

Latvia: `ஆண்கள் தட்டுப்பாடு' - துணையை தேடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பெண்கள்

இந்தியாவில் வடமாநிலங்களில் ஆண்–பெண் விகிதச்சாரம் வெகுவாக மாறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண்கள் திண்டாடிக்கொண்டும் இருக்கின்றனர். ஆனால் ஐரோப்பாவில் உ... மேலும் பார்க்க